4-0 என இந்தியா தொடரை வெல்லும்: ரவிசாஸ்திரி கணிப்பு

நாக்பூர்:இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்துள்ள பேட்டி:  ‘‘இந்திய அணி நிச்சயம் 4-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும் என நம்புகிறேன். ஆஸ்திரேலியா சென்ற இந்திய டெஸ்ட் அணிக்கு, இரண்டுமுறை தலைமை பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். இந்த அனுபவத்தை வைத்துதான் சொல்கிறேன். நான் பயிற்சியாளராக இருந்திருந்தாலும், இப்படித்தான் யோசிப்பேன். நான்கு போட்டிகளிலும் வெல்ல என்ன வாய்ப்பு என்பதை தீவிரமாக ஆராய்வேன்’’

‘‘ஏனென்றால், இது இந்தியா. இந்திய மண்ணில் நம்மை தவிர வேறு எந்த அணியும் ஆதிக்கம் செல்ல முடியாது.

ஆஸ்திரேலிய அணியால் ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொள்ள முடியாது என நினைக்கிறேன். காரணம் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் போன்றவர்கள் அனுபவமிக்க ஸ்பின்னர்கள் இவரை நாள் முழுவதும் எதிர்கொள்வது மிகமிக சவாலான ஒன்று. ஆகையால், இந்திய அணிதான் இந்த தொடரை முழுமையாக 4-0 என்ற கணக்கில் வெல்லும்’’ எனக் கூறினார்.

Related Stories: