×

3 நாளில் போட்டி முடியும் என எதிர்பார்க்கவில்லை: ரோகித்சர்மா பேட்டி

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா அளித்தபேட்டி, “3 நாட்களுக்குள் போட்டி முடிவடையும் என எதிர்பார்க்கவில்லை. பந்துவீச்சில் ஒவ்வொரு அமர்வாக செலவிட தயாராக இருந்தோம். ஆஸ்திரேலியா ஒரே அமர்வில் ஆட்டமிழந்து விடுவார்கள் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆடுகளத்தின் தன்மை மெதுவாக மாறிக் கொண்டே சென்றது. பந்துகள் எழவில்லை.

இது எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் மனநிலை என்னவென்று எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் அணி உறுதியாக இருந்தது. கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாகவே இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடி வருகிறோம். பயிற்சியின் போது சிறந்த முறையில் தயாராகி இருந்தோம். எப்போது சிறந்த முறையில் தயாராகும்போது கிரிக்கெட்டில் மட்டும் அல்ல எல்லா இடங்களிலும் நம்பிக்கை கிடைக்கும். நான் இந்த கேப்டன்சி விஷயத்தை  கோஹ்லி கேப்டனாக இருந்த பொழுது கற்றுக் கொண்டேன். அதைத்தான் நான் இப்பொழுது செய்ய முயற்சிக்கிறேன். அந்த அழுத்தத்தை தொடர்ந்து எதிரணி மீது கொடுத்துக் கொண்டே இருக் வேண்டும். தேவையில்லாமல் உற்சாகம் அடையக் கூடாது, என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறும்போது, “இந்தியாவில் சில நேரங்களில் விளையாட்டு மிக விரைவாக நகர்கிறது. இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். பந்துகள் சுழலும் போது சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் கடினமாக உழைப்பார்கள். ரோகித் சர்மா நன்றாக விளையாடினார். முதல் இன்னிங்ஸில் பந்துகள் சுழன்றது. ஆனால் விளையாட முடியாத அளவுக்கு சுழலவில்லை. இன்னும் கூடுதலாக 100 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். பேட்டிங்கில் தொடக்கம் கடினமானது, ஆனால் எங்கள் பேட்ஸ்மேன்களில் 3 முதல் 4 வீரர்கள் சிறப்பாக தொடங்கினர். சிறப்பான தொடக்கம் கிடைத்தால் அதை பெரிய அளவில் மாற்ற வேண்டும். அது நிகழவில்லை. சுழற்பந்து வீச்சில் மர்பி சிறப்பாக செயல்பட்டார், என்றார்.

ஓய்வின்றி உடற்தகுதிக்கு உழைத்தேன்: ஆட்டநாயகன் விருது பெற்ற ஜடேஜாகூறியதாவது:  5 மாதங்களுக்குப் பின் இந்திய அணிக்கு திரும்ப வந்து டேட்டிங் மற்றும் பந்துவீச்சின் மூலம் பங்களிப்பை வழங்கியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. காயத்திலிருந்து மீண்டு வந்த போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஓய்வில்லாமல் உடன் தகுதிக்காக கடுமையாக உழைத்தேன். தேசிய அகாடமியின் பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்களுக்கு நன்றி. இந்த ஆடுகளத்தில் சுழல் இருந்தது மேலும் சில பந்துகள் தாழ்வாக சென்றன. அதனால் எல்லா பந்துகளையும் ஸ்டம்பை குறி வைத்து நேராக வீசுவதையே தனக்கு இலக்காகக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு பந்தை வீசும் போதும் தனக்குத்தானே ஸ்டெப்புகளை நோக்கி வீச வேண்டும். பேட்டிங்கில் என்னால் முடிந்த அளவு ரன்களை குவிக்க முயற்சி செய்கிறேன், என்றார்.

Tags : Rohit Sharma , Don't expect tournament to end in 3 days: Rohit Sharma Interview
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...