×

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய தொழில் நுட்பத்தால் அங்கன்வாடிகளை நவீனப்படுத்த வேண்டும்: கல்வியாளர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை புதிய தொழில்நுட்பத்தால் நவீனப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றது. இக்கு 5 வயதுக்கு றைவான குழந்கைதள் வந்து செல்வார்கள். அந்த குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படும். இந்த அங்கன்வாடியில் ஒரு மேற்பார்வையாளர் ஒரு சமையலர் பணியில் இருப்பார்கள்.

அங்கன்வாடி மேற்பார்வையாளர் அந்த பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு கொடுப்பது, அவர்கள் குறித்த தகல்களை பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர்.  இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளில் போதிய வசதிகள் இல்லாததால் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், ஏபிசிடி, அஆ உள்ளிட்ட ஆரம்ப கல்வி சொல்லி கொடுப்பதற்கு தேவையான உபகரணங்கள் இல்லாத நிலையில் உள்ளது.

இதனால் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க முடியவில்லை. மேலும் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இப்படி பல்வேறு பிரச்னைகளில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது தனியார் துறையில் பல தொழில்நுட்பங்கள் பயன்டுத்தி குழந்தைகளுக்கு கல்வி போதிக்கின்றனர். அங்கன்வாடிகளில் தற்போது உள்ள ஸ்மாட் வகுப்பறை அமைத்து அதில் அனிமேசன், கார்ட்டூன் படங்கள் மூலம் எளிதில் குழந்தைகளின் விருப்பும் வகையில் விளையாட்டுகள் கற்றுத்தர வேண்டும்.

இதற்கு தமிழக அரசு அங்கன்வாடிகளை புதிய தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக அங்கன்வாடி மையங்களுக்கு வருபவர்கள் யாரும் பெரிய ஆட்கள் இல்லை. அனைத்தும் குழந்தைகள் தான். இதனால் அவர்களுக்கு தேனைய உபகரணங்கள் இருப்பது அவசியம்.


அப்போதுதான் ஒரு நாளைக்கு வந்த குழந்தை மறுநாள் மறுப்பு தெரிவிக்காமல் அங்கன்வாடிக்கு வந்து செல்லும். மாவட்டத்தில் பல்வேறு அங்கன்வாடிகளில் தேவையான போதிய வசதிகள் இல்லை. அங்கன்வாடிகளில் தற்போது உள்ள ஸ்மாட் வகுப்பறை அமைத்து அதில் அனிமேசன், கார்ட்டூன் படங்கள் மூலம் எளிதில் குழந்தைகளின் விருப்பும் வகையில் விளையாட்டுகள் கற்றுத்தர வேண்டும். இதற்கு தமிழக அரசு அங்கன்வாடிகளை புதிய தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags : Anganwadis ,Pudukottai district , Anganwadis need to be modernized with new technology in Pudukottai district: Educators demand
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்