×

மருங்காபுரியில் மர்மவிலங்கு கடித்து 8 ஆடுகள் பலி

துவரங்குறிச்சி: மருங்காபுரியில் விவசாயி வளர்த்து வந்த 14 ஆடுகளை பட்டியில் புகுந்து மர்ம விலங்குகள் கடித்ததில் 8 ஆடுகள் பலியானது. திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா கொடும்பபட்டி ஊராட்சியில் வசிப்பவர் கருப்பன் 57. இவரது வீட்டில் 14 ஆடுகள் வளர்த்து வருகிறார்.  இந்நிலையில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை நேற்று அதிகாலை மர்ம விலங்குகள் புகுந்து 14 ஆடுகளையும் கடித்து குதறிச் சென்றுள்ளது. அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்தனர்.

இதில் 8 ஆடுகள் இறந்தது. நான்கு ஆடுகள் காயம் அடைந்துள்ளது. பின்னர் கால்நடை மருத்துவர்கள் வர வழைக்கப்பட்டு ஆய்வுக்கு பின் ஆடுகள் அனைத்தும் புதைக்கப்பட்டன. கடந்த இரண்டு மாததிற்கு முன் இதேபோல் கருப்பன் வளர்த்து வந்த ஆட்டு மந்தையில் மர்ம விலங்கு கடித்து 35 ஆடுகள் இறந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயியான கருப்பனின் வாழ்வாதாரமாக இருந்த இந்த ஆட்டு குட்டிகள் தற்போது அனைத்தும் மர்ம விலங்கு கடித்து இறந்ததால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாக தெரிவித்தார்.



Tags : Marungapuri , 8 goats died after being bitten by a mysterious animal in Marungapuri
× RELATED தாசில்தாரின் கார் மோதி வாலிபர் பலி