சுற்றுலாதலமான ஏலகிரி மலை பண்டேரா பார்க்கில் செல்லப்பிராணிகள், பறவைகளை குடும்பத்துடன் ரசித்த சுற்றுலா பயணிகள்: விடுமுறையால் களைகட்டியது

ஏலகிரி:  ஏலகிரி மலை பண்டேரா பார்க்கில் செல்லப்பிராணிகள், பறவைகளை குடும்பத்தினருடன் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். திருப்tதூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலை  ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தின் அருகில் உயர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று வளர்ச்சியுற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் பெருமையுடைய ஏலகிரி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கோடைவாச தலமாகும்.

இப்பகுதியில் தூய்மையான காற்று வீசுவதால் அதை அனுபவிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் அடிக்கடி இங்கு வந்து தங்கிச் செல்கின்றனர். உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியை அடைய பொன்னேரி கூட்டுச்சாலையில் இருந்து 14 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.

வாகனங்களில் சுமார் 30 நிமிட மலைப்பாதை பயணம் ஆகும். மலைப்பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகவும், பாரதியார், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், கபிலர், அவ்வையார், பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், நல்லி, பேகன்  ஆகிய பெயர்களை இந்த கொண்டை ஊசி வளைவுகள் பெயர் எழுதப்பட்டுள்ளன.

இங்கு படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, இயற்கை மூலிகை பண்ணை, பண்டேரா பார்க், செல்பி பார்க், மங்களம் சுவாமிமலை ஏற்றம், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் இங்கு உள்ளன. இதனைக்காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து செல்கின்றனர். ஏலகிரியை சுற்றி 40க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், யாத்ரி நிவாஸ் உள்ளன. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

இங்கு அதிக சுற்றுலா பயணிகள் கூடும் இடமாக பண்டேரா பார்க் அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு பறவைகள், புறா, முயல்கள், பாம்புகள், குதிரைகள், நாய் வகைகள், கிரிக்கெட் விளையாட்டு, 7D சினிமா, பிஷ்பா, நெருப்புக் கோழிகள், அரிய ஆடு வகைகள், உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் காண ஏராளமாக  உள்ளது. இந்த சுற்றுலா தலத்திற்கு சென்றால் சுமார்  நான்கு மணி நேரம் பொழுது போக்க செலவாகிறது.  இங்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லபிராணிகளுடன் கொஞ்சியும், பறவைகளுக்கு உணவுகள் கொடுத்தும், குடும்பத்தோடு விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

Related Stories: