சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் நாளை துவக்கம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி மற்றும் சாகசம் நடந்து வருகிறது. கடந்த முறை நடந்த விமான கண்காட்சியின் மூலமாக பல லட்சம் கோடி வர்த்தகம் நடந்தது. அது போல் எச்ஏஎல் தயாரித்த இலகு ரக ஹெலிகாப்டர், தேஜஸ் உள்ளிட்ட விமானங்களின் சாகசத்தை பல லட்சம் பேர் கண்டு களித்தனர். கடந்த முறையை போல் இந்த வருடமும் பெல், பிஇஎம்எல், எச்.ஏ.எல். உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் புதிய கண்டு பிடிப்புகள், கனரக மற்றும் ராணுவ தளவாடங்களும் விமான கண்காட்சியில் இடம் பெறுகின்றன. சிறப்பு மிக்க விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி, நாளை காலை தொடங்கி வைக்கிறார்.

விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள விமான தயாரிப்பு நிறுவனங்களின் கண்காட்சி அரங்கையும் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார். விமான கண்காட்சியை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக விமானங்களின் சாகசங்கள் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு ஒரே நாள் மட்டும் நிலையில் உள்ள நேற்றும் இறுதிகட்ட ஒத்திகை தீவிரமாக நடைபெற்றது.

Related Stories: