×

இடைத்தேர்தல் பிரசாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் மேலும் 6 பேர் சேர்ப்பு: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் மேலும் 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேலும் 6 பேர் சேர்க்கப்படுகிறார்கள். அதன்படி, ஜே.எம்.எச். அசன் மவுலானா எம்எல்ஏ, எஸ்.எம்.இதாயத்துல்லா, ஜெ.அஸ்லம் பாஷா, எஸ்.கே.நவாஸ், பெரம்பூர் ஜி.நிசார், அ.அமீர்கான் ஆகிய 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : K. ,Anekiri , Addition of 6 more to list of star speakers to campaign by-elections: KS Alagiri announcement
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...