ஈரோடு மூலப்பாளையம் அருகே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்பி அளித்த பேட்டி: இளங்கோவனுக்கு சீட்டு வழங்கியதில் யாருக்கும் எந்த அதிருப்தியும் இல்லை. அதனால்தான் நான் இங்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்துள்ளேன். எதிர்க்கட்சி என்ற முறையில் அதிமுகவினர் எதையாவது குறை சொல்லி கொண்டே இருப்பார்கள். அதிமுகவுக்கு ஆர்டிபீஷியலி இம்பியூஸ்டு அதிமுக என புது பெயர் வைத்துள்ளேன். அதாவது, செயற்கையாக ஒன்று சேர்க்கப்பட்ட அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது இருந்த அதிமுக இப்போது இல்லை. பாஜ கட்சியால் ஒன்றிணைத்த பாஜவின் சப்ஸ்டிடியூட்டாக செயல்படும் அதிமுகவாகவே தற்போது உள்ளது. எனவே, அவர்கள் வைக்கும் விமர்சனங்களை மக்கள் நிராகரிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.