வாக்காளர்கள் புத்திசாலிகள் எடப்பாடி கம்பெனிக்கு பாடம் புகட்டுவார்கள்: டிடிவி தினகரன் கருத்து

சத்தியமங்கலத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என சொல்லிவிட்டோம். வரும் 27ம் தேதி மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள். அதிமுக தொண்டர்களை ஏமாற்றும் துரோக சக்தி எடப்பாடி கம்பெனிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இடைத்தேர்தலில் நிறைய பணம் செலவு செய்கிறார்கள். மக்களின் வரிப்பணத்தை மக்களிடமே கொடுக்கிறார்கள். தேர்தல் ஆணையம் இதில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் புத்திசாலிகள். எது சரி என்பது அவர்களுக்கு தெரியும். அதை அவர்கள் செய்வார்கள் என்றார்.

Related Stories: