ஈவிகேஎஸ்சை ஆதரித்து 19ம் தேதி கமல் பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அவருக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வருகிற 19ம் தேதி ஈரோட்டில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். 19ம் தேதி மாலை 5 மணியளவில் கருங்கல்பாளையம், காந்தி சிலை அருகில் தனது பிரசாரத்தை துவங்குகிறார். தொடர்ந்து, சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன் சத்திரம், அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டு, வாக்கு சேகரிக்க உள்ளார்.

Related Stories: