×

அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஜி.கே.வாசன் ‘ஒன்டே’ பிரசாரம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஒரு நாள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில், அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி அணி நடத்திய பேச்சுவார்த்தையில், இந்த தொகுதியை ஜி.கே.வாசன் விட்டுக் கொடுத்தார். இதையடுத்து, அதிமுக வேட்பாளராக தென்னரசு நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நாளை, ஒரு நாள் பிரசாரம் செய்கிறார். அன்று மாலையில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார். இரவு 9 மணிக்கு பிறகு தொண்டர்களை சந்தித்து பிரசாரம் குறித்து பேசுகிறார்.

Tags : GK Vasan 'Onte ,AIADMK , GK Vasan 'Onte' campaign for AIADMK candidate's victory
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...