பல்லாவரம் பகுதிகளில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

பல்லாவரம்: பல்லாவரம் சந்தையில் நேற்று ஒரு வாலிபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக பல்லாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், அவர் சென்னை, ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வசந்த் (21) என்பது தெரிய வந்தது.

அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, 40 போதை மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: