×

திருச்சி விமான நிலையத்தில் பசை வடிவில் கடத்தி வந்த ரூ.51.92 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி: துபாயில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு இண்டிகோ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.  ஒரு ஆண் பயணியின் கைப்பையை சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல் 5 உயர் ரக செல்போன்கள் மற்றும் பசை வடிவிலான ஒரு மர்மபொருள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த மர்மபொருளை சோதனை செய்ததில் 659 கிராம் தங்கம் இருப்பதை கண்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் செல்போன்களின் ஒட்டு மொத்த மதிப்பு 51 லட்சத்து 92 ஆயிரத்து 198 ரூபாயாகும். மேலும் அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Trichy Airport , 51.92 lakh gold smuggled in the form of glue seized at Trichy Airport
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது