×

மேங்கொரேஞ் சாலையோரத்தில் கோழிக் கழிவுகள் கொட்டுவதால் வனவிலங்குகள் பாதிப்பு

பந்தலூர்: பந்தலூர் அருகே மேங்கொரேஞ் பகுதி சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் கோழிக் கழிவுகள் கொட்டுவதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதியான மேங்கொரேஞ், எலியாஸ் கடை,நெல்லியாளம், நீர்மட்டம் உள்ளிட்ட இடங்களில்  பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பல்வேறு இடங்களில் கோழிக்கழிவுகளை மர்மநபர்கள் கொட்டிச்செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் யானை,சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான மேங்கொரேஞ் பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் வனப்பகுதியில் கோழிக்கழிவுகள் மற்றும் பிலாஸ்டிக் பொருட்களை மூட்டை மூட்டைகளாக கொட்டிச் செல்வதால் அதனை உண்பதற்கு வனவிலங்குகள் முற்றுகையிடுவதால் வனவிலங்குகள் மனித மோதல் ஏற்படும் நிலை உள்ளது.

மேலும்  துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் கோழிக்கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை மூட்டைகளாக கொட்டிச் செல்பவர்கள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mangorange , Chicken waste spilling on the roadside of Mangorange affects wildlife
× RELATED சிறுத்தை தாக்கி உயிரிழந்த...