சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசாணையில் பெண்கள் பெயரை வெளியிட்ட விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட காவல் அதிகாரி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
