×

பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரும்: அமெரிக்கா நம்பிக்கை..!

வாஷிங்டன்: பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே  கடந்த பிப்ரவரி மாதம் 24ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யாவை எதிர்த்து போரிட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, துருக்கி போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்காவின் வெள்ளைமாளிகை செய்திதொடர்பாளர் ஜான் கிர்பி; பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சமாதானப்படுத்தினால் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர முடியும். பிரதமர் மோடி புதினை சமாதானப்படுத்த நேரமுள்ளது; இப்போரை முடிவுக்கு கொண்டுவர மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும்” இவ்வாறு கூறினார்.


Tags : PM ,Modi ,Ukraine ,Russia ,America , Ukraine-Russia war will end if Prime Minister Modi thinks: America hopes..!
× RELATED நாட்டில் 25 கோடி மக்களை வறுமையில்...