கொருக்குப்பேட்டை பகுதியில் முதலமைச்சர் கோப்பை கால்பந்து போட்டி: மேயர் தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கால்பந்து போட்டியை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள விளையாட்டு திடலில், முதலமைச்சர் கோப்பை கால்பந்து போட்டியை, மாநகராட்சி மேயர் பிரியா நேற்று தொடங்கி வைத்தார். இதில், வைஷ்ணவா, எத்திராஜ், ராணிமேரி, ஜிஎஸ்எஸ் ஜெயின் உள்ளிட்ட 6 கல்லூரி மற்றும் 7 மாநகராட்சி  மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட கால்பந்து வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். 2 நாள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணி, அடுத்த சுற்றுக்குச் செல்லும். நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், ஆர்.கே.நகர் திமுக பகுதிச் செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், மாநகராட்சி வடக்கு மண்டல இணை ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: