சென்னை: எல்ஐசி நிறுவனத்துக்கு கடந்த டிசம்பருடன் முடிவடைந்த 9 மாதங்களில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.22,970 கோடி கிடைத்துள்ளது. இதுகுறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்ஐசி.யின் வணிகம் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது. நிறுவனத்தின் கடந்த 9 மாத வணிக செயல்பாடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், கடந்த டிசம்பர் 31ம் தேதி வரையான 9 மாத முடிவில்,எல்ஐசி.யின் மொத்த பிரிமீயம் வருவாய் கடந்த 2021ம் ஆண்டு டிச.31 வரை பதிவு செய்யப்பட்ட ரூ.2,83,673 கோடியை விட 20.65 சதவீதம் அதிகரித்து ரூ.3,42,244 கோடியை ஈட்டியது. கடந்த டிசம்பர் 31,2022) வரை முடிவடைந்த 9 மாதங்களுக்கான வரிக்கு பிந்தைய லாபம் ரூ.22,970 ஆகும். இது 2021ம் ஆண்டு டிச.31 வரை முடிவடைந்த 9 மாதங்களுக்கு ரூ.1672 கோடியாக இருந்தது. அதே கடந்த டிச.31 வரை முடிவடைந்த ஒன்பது மாதங்களில் தனிநபர் பிரிவில் 1.29 கோடி பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வருடம் இதே காலக்கட்டத்தில் விற்கப்பட்ட 1.26 கோடிகளை விட 1.92 சதவீதம் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
