×

எஸ்ஏ20 தொடர் சீசன் 1 சன்ரைசர்ஸ் - கேப்பிடல்ஸ் பைனலில் இன்று மோதல்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் முதலாவது எஸ்ஏ20 தொடரின் பைனலில்  பிரிடோரியா கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ்  ஈஸ்டர்ன் கேப் அணிகள் இன்று மோதுகின்றன. கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கிய இத்தொடரின் லீக் ஆட்டங்கள் பிப்.7ம் தேதியுடன் முடிந்தன. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த கேப்பிடல்ஸ், சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ், ராயல்ஸ் அணிகள் அரையிறுதியில் களம் இறங்கின. முதல் அரையிறுதியில்  பிரிடோரியா கேப்பிடல்ஸ் அணி 29 ரன் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் சன்ரைசர்ஸ் 14 ரன் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது.

இன்று இரவு நடக்கும் பைனலில்  சன்ரைசர்ஸ் - கேப்பிடல்ஸ் அணிகள் ‘முதலாவது சாம்பியன்’ ஆகும் முனைப்புடன் களமிறங்குகின்றன. கேப்பிடல்ஸ் அணி ஜன.12ல் நடந்த லீக் ஆட்டத்தில் 23 ரன் வித்தியாசத்திலும், பிப்.14ல் நடந்த லீக் ஆட்டத்தில் 37 ரன் வித்தியாசத்திலும் சன்ரைசர்ஸ் அணியை வென்றுள்ளது. எனினும், மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் நெருக்கடியான நேரங்களில் அதிரடியாக விளையாடி கரை சேர்ந்திருந்திருக்கிறது. இரு அணிகளுமே கோப்பையை முத்தமிட வரிந்துகட்டுவதால் இன்றைய பைனலில் அனல் பறப்பது உறுதி.

Tags : SA20 Series ,Sunrisers ,Capitals , SA20 Series Season 1 Sunrisers - Capitals clash today in the final
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!