×

ரொனால்டோ 500

சவுதி அரேபியாவின் அல் நசர் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வரும் போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப் அணிகளுக்காக விளையாடிய போட்டிகளில் 500 கோல் என்ற சாதனை மைல் கல்லை கடந்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடட் அணியில் இருந்து விலகி அல் நசர் அணியில் இணைந்த ரொனால்டோவுக்கு ஆண்டு ஊதியமாக சுமார் 1771 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. சவூதி புரோ லீக் கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் அல் நசர் - அல் வெஹ்தா அணிகள் மோதின. அதில் அல் நசர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

அந்த 4 கோல்களையும் ரொனால்டோ தான் அடித்தார். இதன் மூலம் பல்வேறு கிளப்களுக்காக 500 கோல்களுக்கு மேல் அடித்தவர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். அல் நசர் அணிக்காக இதுவரை 5 கோல் அடித்துள்ள அவர், ஏற்கனவே  ஸ்போர்ட்டிங் லிஸ்பன் (போர்ச்சுகல்) 3, மான்செஸ்டர் யுனைட்டட் (இங்கிலாந்து) 103, ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) 311 மற்றும் ஜுவென்டஸ் (இத்தாலி) அணிக்காக 81 கோல் அடித்துள்ளார். இது வரை 503 கோல் அடித்துள்ள ரொனால்டோ, இந்த பட்டியலில் பிரேசில் நட்சத்திரங்கள் பீலே (604), ரொமாரியோ (544),  ஆஸ்திரியா/செக் குடியரசின் ஜோசப் பிகான் (518),  ஹங்கேரி/ஸ்பெயின் வீரர் பெரேங்க் புஸ்காஸ் (514) ஆகியோருக்கு அடுத்து 5வது இடத்தில் உள்ளார். அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (490) 6வது இடத்தில் உள்ளார்.

Tags : Ronaldo , Ronaldo 500
× RELATED 38 வயதிலும் கலக்கி வரும் கிறிஸ்டியானோ...