திருப்பதியில் 22 முதல் 28ம் தேதி வரை 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த மாதம் 7 நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த மாதம் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான 7 நாட்களுக்குண்டான ரூ.300 டிக்கெட் மூலம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் வரும் 13ம் தேதி அன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. எனவே பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: