×

ஜம்முவில் மழையினால் நிலச்சரிவு

பனிஹால்:  ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் பிரதான சாலை மூடப்பட்டுள்ளதால் பன்தியால், கபிடேரியா மோர் மற்றும் தல்வாஸ் பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து காத்து கிடக்கின்றன.

Tags : Jammu , Landslides due to rains in Jammu
× RELATED ஜம்முவின் லித்தியத்தை கொள்ளையடிக்கும் பாஜ: மெகபூபா முக்தி கடும் தாக்கு