×

சென்னை விமான நிலையத்தில் ஜனவரியில் விமான சேவை அதிகரிப்பு

சென்னை: கொரோனா பாதிப்பிற்கு பிறகு, அதாவது 2  ஆண்டுகளுக்குப் பின்பு, இந்த 2023 ஆண்டு  ஜனவரி மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள், விமானங்கள்  எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் 12,380 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் ஜனவரி மாதம் முழுவதும் 17,61,426 பேர்  பயணித்துள்ளனர். 2022 டிசம்பர் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை, 17,22,496 ஆகவும், விமானங்களின் எண்ணிக்கை 12,103 ஆகவும்  இருந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 400 விமானங்களில், சராசரியாக 56,822 பயணிகள் பயணித்துள்ளனர். 2022 டிசம்பர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 392 விமானங்களில் 55,565 பயணிகள் பயணித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்பு, நாளுக்கு நாள், பயணிகள் மற்றும் விமானங்கள்  எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

அந்த விதத்தில் கடந்த டிசம்பர் மாதத்தைவிட, கடந்த ஜனவரி மாதம் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. சமீப காலங்களில், இதுவரை இல்லாத அளவு, இந்த ஜனவரி மாதத்தில் சென்னை விமான நிலையத்தில்  பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த டிசம்பர் 23ம் தேதி ஒரே நாளில், சென்னை விமான நிலையத்தில் 62 ஆயிரத்து 486 பயணிகள் பயணித்தனர். சென்னை விமான நிலைய வரலாற்றில், ஒரே நாளில் அதிகபட்ச பயணிகள் பயணம், அதுவே சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Chennai airport , Increase in flight services at Chennai airport in January
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்