×

அதிமுகவுக்கு டெபாசிட்டுடன்தான் போட்டி; ஜெயலலிதா தோற்றது செங்கோட்டையனுக்கு ஞாபகம் இல்ல போல: காசிமுத்து மாணிக்கம் பதிலடி

‘திண்டுக்கல், மருங்காபுரியில் அதிமுக வென்றது போல் ஈரோட்டில் வெல்லும்’ என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், திமுக கூட்டணி வேட்பாளர்  ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வர்த்தர் அணி  செயலாளர் காசி.முத்துமாணிக்கம் பேசியதாவது:

1980ல் இரட்டை இலையில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 38 இடங்களில் தோற்றதையும், 1996ம் ஆண்டு பர்கூரில் ஜெயலலிதாவே இரட்டை இலையில் சுகவனத்திடம் தோற்றதையும், பென்னாகரத்தில் 2010ல் இரட்டை இலை டெபாசிட் இழந்ததையும், 2017ல் சுயேச்சை சின்னத்திடம் ஆளும் கட்சியாக இருந்து கொண்டு இரட்டை இலை 40,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றதையும் வசதியாக மறக்க வேண்டாம். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இரண்டு ஆண்டு ஆட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். சிலருக்கு நோட்டாவுடன் போட்டி, அதிமுகவுக்கு டெபாசிட்டுடன் போட்டா போட்டி. மதுரையில் சிலம்போடு கோவலன் கதை முடிந்தது, ஈரோட்டில் இடைத்தேர்தலோடு எடப்பாடி கூட்டம் கதை முடிந்தது என்பதை இந்த தேர்தல் காட்டும். இவ்வாறு அவர்  பேசினார்.

Tags : AIADMK ,Jayalalithaa ,Sengottaiyan ,Kashimuthu Manickam , AIADMK only competes with deposits; Jayalalithaa's loss as if Sengottaiyan doesn't remember: Kashimuthu Manickam retaliates
× RELATED 2001, 2017ல் நான் முதல்வராயிருக்க முடியும்:...