×

34-வது கலைக்கூடல் கலாச்சாரத் திருவிழாவை தொடங்கி வைத்தார் இசைஞானி இளையராஜா: நிகழ்ச்சிக்கு தமிழில் விளம்பர பலகை வைக்காததால் சர்ச்சை

சென்னை: சென்னையில் கலைக்கூடல் என்ற பெயரில் 3 நாட்கள் நடைபெறும் கலாச்சார திருவிழாவை இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தொடங்கி வைத்தார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 34-வது அனைத்திந்திய கலைக்கூடல் கலாச்சார திருவிழா தொடங்கி இருக்கிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜா தனது இசையில் உருவான ஜனனி ஜனனி ஜகம் நீ எனும் பாடலை பாடி அரங்கத்தில் இருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.

அப்போது மேடையில் இருந்தவாறு இசைக்கூடத்தில் நடைபெறும் பணிகளை அங்கிருந்த ஊழியர்களுடன் செல்போனில் அழைத்து பேசி ரசிகர்களுக்கு இளையராஜா விளக்கினார். இளையராஜா பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் ஏன் தமிழ் இடம்பெறவில்லை என செய்தியாளர்கள் கேட்டபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பதில் கூறாமல் செய்தியாளர் சந்திப்பினை பாதியிலேயே முடித்து கொண்டனர்.  


Tags : 34th ,Kalaikoodal Cultural Festival , Art Gallery, Cultural, Festival, Musician, Ilayaraja, Tamil, Advertisement, Board, Controversy
× RELATED அமிர்தகடேஸ்வரர் ஆலயம், மேலக்கடம்பூர்