சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க 6 குழுக்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருவதாக சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா பற்றி புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் பறக்கும்படை தயாராக உள்ளது. அதிமுக புகார் கூறிய 5 வாக்குசாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் அனைத்தும் சரியாகவே உள்ளது என சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.
