×

8 வட்டாரங்களை சேர்ந்த 1250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா-கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

கரூர் : கரூர் மாவட்டத்தில் 8 வட்டாரங்களை சேர்ந்த 1250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படவுள்ளது என்று கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.
கரூர் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் கவிதா முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில் கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:

மகப்பேறு காம் மிகவும் மகிழ்ச்சியான காலம். நாம் செய்யக்கூடிய ஆரோக்கியமான ஒவ்வொரு பழக்க வழக்கமும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். ஊட்டசத்து மிகுந்த உணவுகளை உண்ண வேண்டும். உங்கள் பிரசவத்தை மருத்துவமனைகளில் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.தேவையான தடுப்பூசி மற்றும் மருத்துவ உதவிகளை அரசு உங்களுக்கு வழங்குகிறது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் வருங்கால து£ண்கள் குழந்தைகள்தான். அதற்காக நீங்கள் கர்ப்ப காலத்தில் நல்ல குழந்தைகளை உருவாக்க, நல்ல உணவுகளை, நல்ல மனநிலையில் உட்கொள்ள வேண்டும்.

சமூக நலத்துறையின் சார்பாக நடத்தக்கூடிய மிக முக்கியமான நிகழ்வு இது. கரூர் மாவட்டத்தில் பொக்கிஷம் என்ற திட்டத்தின் மூலம் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து குறைவு உள்ள பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குமு திட்டம் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆறு மாதத்தில் 2000க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சமூதாய வளைகாப்பிலும், நம் அமைச்சர் உங்களுக்கு சிறப்பான சீர்வரிசையை வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 5447 கர்ப்பிணி பெண்களில் கடைசி மூன்று மாதத்தில் உள்ள 8 வட்டாரங்களை சேர்ந்த 1250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படவுள்ளது. இதில், முதற்கட்டமாக கரூர், தாந்தோணி மற்றும் க.பரமத்தி வட்டாரங்களை சேர்ந்த 500 கர்ப்பிணி பெண்களுக்கு இன்றைய தினம் வழங்கப்படுகிறது.
முன்னதாக, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொடர்பான வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.

தொடர்ந்து, அங்கன்வாடி குழந்தைகளின் வரவேற்பு நடனமும் நடைபெற்றது.கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகையான கலவை சாதங்களுடன் சாப்பாடு வழங்கப்பட்டது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சார்பாக 500 கர்ப்பிணி பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகலட்சுமி, தாசில்தார் சிவக்குமார் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags : Karur , Karur: Collector Prabhu Shankar said that a community baby shower will be held for 1250 pregnant women from 8 localities in Karur district.
× RELATED கரூர் சுங்ககேட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு