×

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் புகைப்படக் கண்காட்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்

சென்னை: தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ஒரு வாரம் நடக்க உள்ள புகைப்படக் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தில், பல்வேறு பத்திரிகைகளின் புகைப்படக் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.


இயற்கை சீற்றங்கள், முக்கிய சம்பவங்கள் போன்ற நிகழ்வுகளில் தாங்கள் துணிச்சலுடன், சிரமப்பட்டு எடுத்தசிறந்த புகைப்படங்களை அனைவரும் ரசிக்கும் வகையில் இவர்கள் காட்சிப்படுத்துகின்றனர்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் இந்த கண்காட்சியை முதலமைச்சர்
மு. க. ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்துள்ளார். விழாவில்,புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளார். நிகழ்வுக்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை வகிக்கிறார். இந்து என்.ராம் முன்னிலை வகிக்கிறார்.

இக்கண்காட்சி இன்று தொடங்கி, பிப்.15ம் தேதி வரை ஒருவார காலம் நடைபெறுகிறது. இதில்,தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் புகைப்படக்கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களும் இடம்பெறுகின்றன. பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த புகைப்படங்களின் தொகுப்பை ஒரே இடத்தில் காணலாம் என்பதால், புகைப்பட ஆர்வலர்கள் இதை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம் என தெரிவித்துள்ளனர், இதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


Tags : Tamil ,Nadu Press Photographers Association Photo Exhibition ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin , Tamil Nadu Press Photographers Association Photo Exhibition Tamil Nadu Chief Minister M.K. Stalin started it
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...