×

இந்தியாவில் முதல் முறையாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் காஷ்மீரில் கண்டுபிடிப்பு

காஷ்மீர்: இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் கனிமம் ஜம்மு-காஷ்மீரில் கண்டிபிடிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், அங்கு பூமிக்கு அடியில் 5.9 மில்லியன் டன் அளவிலான லித்திய படிவுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்தியாவில் லித்திய படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

பேட்டர்கள் தயாரிப்பிற்கு மிகவும் முக்கிய மூலப்பொருள் லித்தியம் கனிமம் ஆகும். மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் லித்தியம் கனிமம் அதிமுக்கியமான மூலப்பொருள் ஆகும். இரும்பு அல்லாத உலோகமான லித்தியம் செல்போன், லேப்டாப், டிஜிட்டல் கேமரா, மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரியின் முக்கிய மூலப்பொருளாகும். இந்தியாவில் இதுவரை லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போதுவரை இந்தியா லித்தியம் பேட்டரிகளை சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா புவியியல் ஆய்வு அமைப்பு நாட்டில் உள்ள கனிம வளங்களை கண்டறிய பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் கனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் அந்த பகுதியில் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் லித்தியம் கனிம தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் மின்சார வாகனங்களுக்கான மூலப்பொருளான லித்தியம் பேட்டரி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

Tags : India ,Kashmir , India's first discovery of 5.9 million tonnes of lithium mineral in Kashmir
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...