×

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான யாஹூ ஆட்குறைப்பு அறிவிப்பு: 2023-க்குள் சுமார் 1,000 பேரை வீட்டுக்கு அனுப்ப யாஹூ முடிவு

காலிபோர்னியா: பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான யாஹூ சுமார் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. சுமார் 1000 பேரை பணி நீக்க, செய்ய யாஹூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி 12% ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என யாஹூ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜிம் லான்சோன் கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் வணிக விளம்பர தொழில் நுட்ப பிரிவில் மட்டும் 50% வரை ஊழியர்களை பணிநீக்கம் செய்ய யாஹூ திட்டமிட்டுள்ளது. ஆட்குறைப்பு நடவடிக்கையால் யாஹூ நிறுவனத்தில் 1000 பணியாளர்கள் வேலையிழப்பார்கள் என தெரிகிறது.

கொரோனா பரவல் மற்றும் ரஷ்யா, உக்ரைன் போரின் தாக்கத்தால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக செலவினங்களை குறைக்கும் விதமாக கூகுள், அமேசான், ஜூம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பிரபல பொழுதுபோக்கு சார்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி நேற்று முன் தினம் 7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருந்த நிலையில் யாஹூவும் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  


Tags : Yahoo , Yahoo, layoffs, announcement, termination
× RELATED யாகூ தேடலில் சமந்தாவுக்கு 10வது இடம்..!