குழந்தைகள் கிட்ட கேட்டா.... பெற்றோர் ஓட்டு போடுவாங்களாம்... மாஜிக்கு என்னொரு புத்திச்சாலித்தனம்

அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக, ஈரோடு கருங்கல்பாளையம் சுப்பிரமணியசுவாமி கோயில் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று காலை பிரசாரம் மேற்கொண்டார். காலை நேரம் என்பதால் மக்கள் வேலைகளுக்கு சென்று விட்ட காரணத்தால் வீடுகளின் முன்பாக எந்த மக்களும் வரவில்லை. இதனால், ஆர்.பி.உதயகுமார் அவ்வழியாக பள்ளி வேனில் சென்ற குழந்தைகளிடமும், மாணவ-மாணவிகளிடமும் இரட்டை சிலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மக்கள், ‘‘பள்ளி குழந்தைகளுக்குதான் ஓட்டுரிமையே இல்லையே. இவர்களிடம்போய் முன்னாள் அமைச்சர் வாக்கு கேட்கிறார்’’ என கேட்டனர். அதற்கு அங்கிருந்த அதிமுகவினர், ‘‘இந்த பள்ளி குழந்தைகளிடம் வாக்கு கேட்டால், அவர்கள் அவர்களது பெற்றோரிடம் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க சொல்வார்கள்’’ என தெரிவித்தனர்.

Related Stories: