புழல் சிறையில் பணிபுரியும் காவலர்களுக்கு சான்றிதழ்

புழல்:தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் பணிபுரியும் 60 சீருடை பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாள் அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறை நற்பணி பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நற்பணி பதக்க பட்டியலில் புழல் தண்டனை, விசாரணை பிரிவுகள் மற்றும் பெண்கள் சிறையில் பணியாற்றும் 10 காவலர்களுக்கு நற்பணி பதக்கம் வழங்க ஆணையிடப்பட்டது.

இதையடுத்து, பதக்கம் பெறுவதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி புழல் சிறை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை சரக சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன் சான்றுகளை வழங்கினார். இதில் விசாரணை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், சிறை அலுவலர் இளங்கோ, பெண்கள் சிறை அலுவலர் (பொறுப்பு) வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: