ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் இலங்கை பயணம்!

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் பயணமாக இலங்கைக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை புறப்பட்டு சென்றனர். வடக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்காக இந்தியா வழங்கிய மானியத்தின் கீழ் கட்டப்பட்ட திட்டங்களைப் பார்வையிடுகின்றனர். யாழ்ப்பாணம் கலாசார மையமானது இந்தியா இலங்கைக்கு இடையேயான நல்லுறவுக்கான எடுத்துக்காட்டு ஆகும்.

இந்த அதிநவீன மையமானது அருங்காட்சியகம் 600க்கும் மேற்பட்ட மக்கள் அமரக்கூடிய கலையரங்கம், 11 மாடி அதிநவீன நூலகம் மற்றும் திறந்த வெளி அரங்கம், பொது சதுக்கம் போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ளது. இலங்கை பயணம் குறித்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன்; இலங்கை பயணத்தின் போது தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்னை குறித்து பேசப்படும் என கூறினார்.

Related Stories: