சென்னை: மலேசியா, துபாய் நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியாவில் இருந்து வந்த பயணி ஒருவரிடமும், துபாயில் இருந்து வந்த 2 பயணிகளிடமும் இருந்தும் 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்தது.தங்கத்தை விமானத்தில் கடத்தி வந்த 3 பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.