ஐதராபாத்தில் மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் அறிமுகம்

திருமலை: தெலங்கானாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் வருகிற 11ம் தேதி பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஐதராபாத்தில் பயன்படுத்துவதற்காக 3 மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் டிரைவருடன் சேர்த்து 65  பேர் அமரக்கூடிய வசதி உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ பயணிக்க  முடியும். 2 முதல் 2.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

இந்த  பேருந்துகள் ஒவ்வொன்றும்  ரூ.2.16 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.  இந்த பேருந்துகள் முழுக்க முழுக்க மின்சார பேட்டரியில் இயங்கும். ஆகையால், சுற்றுச்சூழல் மாசுபடுவதில் இருந்தும் தடுக்க முடியும்.  இந்த பேருந்து சேவை வரும் 11ம் தேதி முதல் துவங்க உள்ளது.  சுற்றுலா பயணிகளை கவரும்  வகையில் பேருந்துகளை பாரம்பரிய சின்னங்கள் உள்ள சுற்றுப்பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Related Stories: