×

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் நரிக்குறவ பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை மையம்: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில், நரிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் உள்ள நரிக்குறவர் பெண்கள், சுயதொழில் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அவர்களின் பொருட்கள் விற்பனை செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பஸ் நிலையத்தில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் கட்டிடம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் நரிக்குறவர்கள் உற்பத்தி செய்துள்ள பொருட்கள் விற்பனை செய்ய  உள்ளது. இந்த விற்பனை மையம் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விற்பனை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள் சுந்தர் பங்கேற்றனர். முன்னதாக, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் அமைகப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

காஞ்சிபுரம்: தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்தார். காஞ்சிபுரம் தொகுதி எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் வரவேற்றனர்.  காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்துக்கு அமைச்சராக பொறுப்பேற்று பிறகு முதன் முறையாக வந்த, உதயநிதி ஸ்டாலின் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அங்குள்ள, வருகை பதிவேட்டில் ‘‘தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில் தமிழகத்தில் நல்லாட்சி தொடர நானும் பாடுபடுவேன்’’ என்று பதிவிட்டு கையெழுத்திட்டார். பின்னர், காஞ்சிபுரம் அடுத்துள்ள மீனாட்சி மருத்துவமனையில் புதுமைப்பெண் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர், 100 பேருக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

மாணவிகளுக்கு வங்கி ‘டெபிட் கார்ட்’
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் மருத்துவ கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்ட நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர், அவர் பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று இரண்டாம் கட்டமாக 1,341 மாணவிகளுக்கு டெபிட் கார்டு வழங்கினார். மேலும், வருகை புரிந்துள்ள மாணவிகள் அனைவருக்கும் வரவேற்பு தொகுப்பு பையில், 2 புத்தகங்கள், பற்று அட்டை வழங்கப்பட்டது. பணம் வங்கி கணக்கில் வரப்பெற்ற விவரங்கள் உடனுக்குடன் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்படும்.இத்திட்டத்தினை அனைத்து மாணவிகளும் நல்ல வகையில் பயன்படுத்தி கொண்டு தங்கள் படிப்பின்மீது முழு கவனம் செலுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

Tags : Minister ,Udhayanidhi ,Sriperumbudur , Sriperumbudur Municipality, Narikuruwa Women, Minister Udayanidhi,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை...