×

2வது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை நேரில் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அவரது வீட்டிற்கே நேரில் சென்று நலம் விசாரித்தார். ஆவடி, ஸ்ரீவாரி நகரை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மற்றும் சவுபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச்சிதைவு நோயால் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்றும் கடுமையாக நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த சிகிச்சைக்கு பணம் இல்லாததால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு உதவ வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த தகவல் முதல்வர் கவனத்துக்கு சென்றவுடன், சிறுமி டேனியாவிற்கு, சவிதா மருத்துவ கல்லூரியில் முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடந்த 29.8.2022 அன்று நேரடியாக டானியா சிகிச்சை பெற்ற  மருத்துவமனைக்கு நேரில் நலம் விசாரித்தார். சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, 2வது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவின் வீட்டிற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது சிறுமியிடம், எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும் என்றும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி, தொடர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

சிறுமி டானியாவின் தாய் சவுபாக்கியம், தனது இல்லத்துக்கு நேரில் வந்து மகளை நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.இந்த நிகழ்வின்போது, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tania , Facelift treatment, girl Tania, principal M.K.Stalin
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...