×

அமெரிக்க குடியுரிமையை துறக்க பசில் ராஜபக்சே முடிவு

கொழும்பு: இலங்கையின் முன்னாள் நிதியமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சே தனது அமெரிக்க இரட்டைக் குடியுரிமையை கைவிட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார, நிதி நெருக்கடியை தொடர்ந்து கடந்தாண்டு ஏப்ரலில் நிதி அமைச்சர் பதவியையும், ஜூனில் எம்பி. பதவியையும் பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தார்.  

இந்நிலையில், அவர் நேற்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ``எனது அரசியல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் இரட்டை குடியுரிமை பிரச்னையாக இருக்கிறது என்றால், மக்கள் பணியாற்ற தடையாக இருக்கும் அதனை துறக்க தயாராக இருக்கிறேன்,’’ என்று கூறினார். இதையடுத்து, இரட்டை குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பான ஆவணங்களை பசில் ராஜபக்ச தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் இலங்கை திரும்புவார் என்று தெரிய வந்துள்ளது.

Tags : Basil Rajapakse ,US , Basil Rajapakse has decided to renounce his US citizenship
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்