×

வைரமடையில் இருந்து கரூர் வரையிலான 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்த ரூ137 கோடி ஒதுக்கீடு..!

கரூர்: வைரமடையில் இருந்து கரூர் வரையிலான 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்த ரூ137 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தே.நெ.81 (கோயம்புத்தூர்- சிதம்பரம்) சாலையானது கரூர் மாவட்டத்தில் மிகவும் முக்கியமான சாலையாகும். இச்சாலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து மற்றும் கனரக சரக்கு வாகன கட்டுமான தொழிற்சாலைகள், ஜவுளி தொழிற்சாலைகள், கல்குவாரி போன்றவைகள் அமைந்துள்ளன.

மேலும் இச்சாலையானது உள்ளீட்டு மூலப்பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதற்கும் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் உற்பத்தி பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படும் முக்கிய சாலையாகும். இச்சாலையானது கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை, கோயம்புத்தூர், ஊட்டி ஆகிய முக்கிய மாவட்டங்களை இணைக்கும் சாலையாக அமைந்துள்ளது.

மேலும் இச்சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே போக்குவரத்து செரிவு மற்றும் சாலை பாதுகாப்பினை கருத்திற்கொண்டு இச்சாலையை கி.மீ.81/300-110/700 வரை இருவழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்த ரூ.137.25 கோடி மதிப்பிற்கு ஒன்றிய அரசிடம் நிர்வாக ஒப்புதல் மற்றும் தொழில்நுட்ப அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இப்பணி முடிவுபெற்றபின் இச்சாலையானது போக்குவரத்து நெரிசல் குறைந்து சாலை பயன்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பான சாலைப் பயணத்திற்கு வழிவகுக்கும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Diamaramada ,Karur , Allocation of Rs 137 crore to upgrade the 2 lane road from Vairamatai to Karur to 4 lane..!
× RELATED கரூர் சுங்ககேட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு