இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீகாளஹஸ்தியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

*கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு

ஸ்ரீகாளஹஸ்தி : இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீகாளஹஸ்தியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலெக்டர் வெங்கடரமணா மற்றும் எம்எல்ஏ மதுசூதன் பங்கேற்றனர். திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி நகரில் உள்ள ஆண்கள் மேல்நிலை பள்ளியில்  இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வெங்கடரமணா தலைமை தாங்கினார். தொகுதி எம்எல்ஏ மதுசூதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து, கலெக்டர் வெங்கடரமணா பேசியதாவது: மாநில அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால், பள்ளி வளர்ச்சியுடன் மாணவர்களுக்கு டேப் வழங்கி வருகிறது. அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். மாணவர்களிடம் உள்ள படிப்பாற்றலை வெளிக்கொணரவும், அவர்களின் திறமையை கண்டறிந்து அவர்களை எதிர்கால விஞ்ஞானிகளாக உருவாக்கவும் இதுபோன்ற கண்காட்சிகள் உதவுகின்றன. மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்குவதில் மதிய உணவு திட்டமான(ஜெகன் அண்ணா, கோருமுத்தா)வுடன் திருப்திகரமாக மாணவர்கள் சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சட்ட பேரவை உறுப்பினர் விட்டப்பு பாலசுப்ரமணியம், ஆர்டிஓ ராமராவ், மாவட்ட கல்வி அலுவலர் சேகர், துணை கல்வி அலுவலர் ரகுராமையா, மண்டல கல்வி அதிகாரி புவனேஸ்வரி, பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி, மாவட்ட அறிவியல் அலுவலர் பானுபிரசாத், அறிவியல் ஒருங்கிணைப்பாளர்கள் தனுஞ்சய சாரதி, கோதண்டபாணி, மண்டல கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: