தைப்பூசத்தையொட்டி புளியங்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்-திரளான பக்தர்கள் தரிசனம்

புளியங்குடி : புளியங்குடி பால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைபூசத்தை ஒட்டி மகம் நட்சத்திரம் அன்று தெப்ப உற்சவம் நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த 26ம்தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. 10 நாட்கள் திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி இரவு 8மணிக்கு பாலசுப்பிரமணியர் மேள தாளம் முழங்க சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமி தெப்பத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பூஜைகளை கணபதி பட்டர், முருகன் பட்டர், கோமதி சங்கர் பட்டர் நடத்தினர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி தேவி, புன்னையாபுரம் யாதவர் சமுதாய நாட்டண்மை பரமசிவம் தலைமையில் பழனிசாமி கனி, சுந்தரம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தினர்.

இதில் புளியங்குடி, புன்னையாபுரம், திருவேட்டநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று  சுவாமி தரிசனம் செய்தனர். டிஎஸ்பி அசோக் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் (பொறுப்பு) எஸ்ஐ பரமசிவன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாசிகளால் துர்நாற்றம்

தெப்ப திருவிழாவையொட்டி தெப்பம் சுத்தம் செய்யப்படாமல் பாசி படர்ந்து குப்பைகளாக காணப்பட்டது. இதனால் துர்நாற்றம் வீசியது. இது சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வேதனை அடைந்தனர். பொது மக்கள் மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் நடைபெற்ற தெப்ப திருவிழாவில் கோயில் நிர்வாகம் முன்னேற்பாடான நடவடிக்கை எடுத்து தெப்பத்தை சுத்தம் செய்திருக்கலாம் என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: