×

முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆவடியில் உள்ள சிறுமி டானியாவின் இல்லத்துக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். ஸ்டீபன்ராஜ், சவுபாக்கியா தம்பதியின் மகள் டானியாவுக்கு சமீபத்தில் 2-வது அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.  

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர், அவரை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்தும் பாதிப்பு குறையவில்லை. இதனையடுத்து பல மருத்துவமணையில் டானியா-வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல டானியாவின் முகம், வலது கண், கண்ணம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதையத் தொடங்கியது.

திருவள்ளூர் ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தைக்கு பரிசோதனை மேற்கொண்டனர். அதன் பிறகு, சிறுமிக்கு சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் சிறுமி டான்யா அனுமதிக்கப்பட்டார். நோய்க்கான முழு சிகிச்சையையும் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டணமின்றி செய்வதற்கும் உத்தரவாதம் அளித்தது. இந்நிலையில் அவருக்கு ஓட்டுருப்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.இந்த அறுவை சிகிச்சை தொடர்ந்து 8 மணி நேரம் நடக்கும் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்தனர். அதன்பிறகு சிகிச்சை முடிந்த தனது வீட்டில் முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



Tags : Chief Minister ,M.K.Stalin ,Tania , Chief Minister M.K.Stalin personally met Tania, who was suffering from facial disfigurement and was undergoing surgery.
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...