கோவையில் பட்டீஸ்வரர் கோயில் யானைக்கு குளியல் தொட்டியை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

கோவை: கோவை பட்டீஸ்வரர் கோயில் யானைக்கு கட்டப்பட்ட குளியல் தொட்டியில் கல்யாணி யானை ஆனந்த குளியல் போட்டது. கோவையில் உள்ள பட்டீஸ்வரர் கோவில் யானையான பேரூர் கல்யாணி குளிக்க, நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதிகளை மேம்படுத்த அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதை அடுத்து கோவிலுக்கு பின் பகுதியில் 5.5 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு கல்யாணி யானை குளிக்க 4 அடி உயரத்திற்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் லிட்டர் கொள்ளளவில் குளியல் தொட்டி அமைக்கபட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதனை திறந்து வாய்த்த நிலையில் யானை கல்யாணி ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தது. குளியல் தொட்டியை தொடர்ந்து யானை நடை பயிற்சி மேற்கொள்ள மணலும் கிணற்று மண்ணால் நடைப்பதையும் அமைக்கப்பட்டு வருகிறது.

Related Stories: