திருவொற்றியூர்: திருவொற்றியூரில், குடிபோதையில் மின்சார ரயிலில் ஏறமுயன்ற முதியவர் தவறி கீழே விழுந்ததில், அவரது கால் துண்டிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, திருவொற்றியூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சாமிநாதன் (50). இவர், நேற்று முன்தினம் பாரத் நகரில் கட்டிட வேலை செய்துவிட்டு, மாலை வீட்டுக்கு செல்ல விம்கோ ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த மின்சார ரயிலில் சாமிநாதன் ஏறுவதற்கு முன் ரயில் புறப்பட்டு விட்டது. இதனால், ரயில் பெட்டியின் கம்பியை பிடித்தவாறு, ஓடிச்சென்று ரயிலில் ஏற முயன்றார். அப்போது நிலை தடுமாறு தவறி கீழே விழுந்தார்.