×

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக என்ன நடவடிக்கை ஒன்றிய அரசு எடுத்துள்ளது: தொல்.திருமாவளவன் கேள்வி

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக என்ன நடவடிக்கையை ஒன்றிய அரசு இதுவரை எடுத்துள்ளது என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக மக்களவையில் தொல். திருமாவளவன் எழுப்பிய கேள்வி: ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக  நடவடிக்கைகள் ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? சூதாட்டம் தொடர்பாக  விளம்பரம் மூலம்  ஊக்குவிப்பதற்கு எதிராக அரசு ஏதேனும் அறிவுரைகள் வெளியிட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக, பதிலளித்த ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் கூறியிருப்பதாவது: பந்தயம் மற்றும் சூதாட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 34 மற்றும் 62ன் கீழ் வருகிறது. இது மாநிலங்களின் ஒழுங்குமுறைக்குள் வருகிறது. முந்தைய பொது சூதாட்டச் சட்டம் 1867ன் படி, பெரும்பாலான மாநில அரசுகள் பந்தயம் மற்றும் சூதாட்டம் குறித்து தங்களது சொந்த சட்டங்களை இயற்றியுள்ளன. தனியார் செயற்கைக்கோள் டிவி சேனல்கள், டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கடந்தாண்டு ஜுன் 13ம் தேதி மற்றும் அக்டோபர் 3ம் தேதி ஆலோசனைகளில் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆலோசனைகள் சமூக ஊடக தளங்களுக்கு தெரிவிக்கப்பட்டன. குறிப்பிடப்படும் படியான விதிமீறல்கள் அமைச்சகத்தின் கவனத்திற்கு எப்போது வந்தாலும் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


Tags : Union Government ,Thirumavavan , What action has the Union Government taken against online gambling: Question by Thol. Thirumavalavan
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...