×

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பீட்டிலான மனைகள் சுவாதீனம் பெறப்பட்டது

சென்னை: சென்னை, மேற்கு மாம்பலம், அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பீட்டிலான மனைகள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய   றநிலையத்துறையின் பகட்டுப்பாட்டிலுள்ள ததிருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று (07.02.2023) சென்னை, மேற்கு மாம்பலம், அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 13 கோடி மதிப்பீட்டிலான வணிக மனைகள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சென்னை, மேற்கு மாம்பலத்தில், அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்குச் சொந்தமாக ஏரிக்கரை சாலையில்  10,486 சதுரஅடி, சர்தார் பட்டேல் தெருவில் 4,054 சதுர அடி, ஈஸ்வரன் கோயில் தெருவில் 262 சதுர அடி ஆக மொத்தம் - 14,802 சதுர அடி (6 கிரவுண்ட், 402 சதுர அடி) பரப்பளவுள்ள மனைகள் 18 நபர்களுக்கு வணிக பயன்பாட்டிற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

இவர்கள் நீண்டகாலமாக வாடகை செலுத்தாமல் அனுபவித்து வந்ததால், சென்னை இணை ஆணையர் மண்டலம் - 2 அவர்களின் சட்டப்பிரிவு - 78 உத்தரவின்படி, காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று (07.02.2023) அம்மனைகளில் அமைந்துள்ள கடைகள் சென்னை மாவட்ட உதவி ஆணையர் திரு.எம். பாஸ்கரன் அவர்களால் பூட்டி சீலிடப்பட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இம்மனைகளின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.13 கோடியாகும். இந்நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலர் சோழமாதேவி, ஆய்வாளர் அறிவழகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : West Mambalam ,Kasi Viswanatha Swamy Temple , Lands worth Rs 13 crore belonging to West Mambalam Kasi Viswanatha Swamy Temple acquired
× RELATED சென்னையில் அச்சகத்தின் பெயரின்றி...