
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து அமமுக விலகுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததால் அமமுக விலகுவதாக டி.டி.வி. தினகரன் விளக்கம் அளித்துள்ளார். இடைத்தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிட்டால் தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்பதால் விலகுவதாக அவர் தெரிவித்தார்.