×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்தது..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜனவரி 31ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று (பிப்.07) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு, அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், தேமுதிகவின் ஆனந்த் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மற்றும் சுயேச்சைகள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. வேட்புமனுக்களை மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாளாகும். பிப்ரவரி 10ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2ம் தேதியும் நடைபெறுகிறது. 


Tags : Erode ,East Block ,Inter-Elections , Erode by-election, filing of nominations, deadline is over
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!