×

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஓய்வு.!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான ஆரோன் பின்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு டி20 உலகக்கோப்பையை பின்ச் வென்றுக்கொடுத்துள்ளார். 36 வயதான ஆரோன் பின்ச் இதுவரை 254 சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளார். 146 ஒருநாள், 103 டி20 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளார்.

மேலும் ஆஸ்திரேலிய அணியை 76 டி20 மற்றும் 55 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி உள்ளார். ஆஸ்திரேலியா அணி ஒருநாள் உலகக்கோப்பை (2015) மற்றும் டி20 உலகக்கோப்பை (2021) வென்ற போது அணியில் அங்கம் வகித்தார். சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதன் மூலம் அவர் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

கடந்த 2011ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச அரங்கில் கால் பதித்த பின்ச் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 278 ரன்னும், 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5406 ரன்னும், 103 டி220 போட்டிகளில் 3120 ரன்னும் அடித்துள்ளார். இவர் மேலும் 92 ஐபிஎல் போட்டிகளில் 2091 ரன்கள் அடித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் பின்ச் ( 172 ரன்) என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Australia ,Aaron Finch , Former Australian captain Aaron Finch retires from international cricket.
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது