சிங்கப்பூரில் உற்சாக தைப்பூச கொண்டாட்டம்

சிங்கப்பூர்: கொரோனா பரவல் முடிந்து 2 ஆண்டுகளுக்குப்பின் சிங்கப்பூர் தமிழர்கள் தைப்பூசத் திருநாளை நேற்றுமுன்தினம் கோலாகலமாக  கொண்டாடினர். ஏராளமான தமிழர்கள் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்ட காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், முகத்தில், நாக்கில், உடலில் வேல் குத்தியும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் நடந்த தைப்பூச விழாவில் 35 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். அந்நாட்டின் மனிதவளத்துறை அமைச்சர் டான் சீ லெங்கும் கோயிலில் வழிபாடு செய்தார். பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரண்டு கோயில்களும் புலம்பெயர்ந்து வந்த தமிழர்களால் கட்டப்பட்டதாகும்.

Related Stories: